Recent Posts

Search This Blog

நாடு மீண்டும் எழுச்சி பெற்றுள்ளதாக எஸ்.பி.திஸாநாயக்க மக்கள் சந்திப்பில் தெரிவித்த போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்த நபரை வெளியேறுமாறும் உத்தரவிட்டார்.

Saturday, 8 April 2023


நாடு மீண்டும் எழுச்சி பெற்றுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

வெளிமடை பகுதியில் மக்கள் சந்திப்பில், ஈடுபட்ட சந்தர்ப்பத்திலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நாடு கடந்த வருடம் போராட்டங்கள் காரணமாக பாரிய சரிவை சந்தித்திருந்தது.

காலிமுகத்திடல் போராட்டம், வலுவடைந்த பின்னர் ஜனாதிபதி செயலகத்தின் கதவு அருகிலும் கூடாரங்கள் அமைக்கப்பட்டன.

தற்போது அந்த நிலைமை இல்லை.

இந்தநிலையில், நாடு பொருளாதார ரீதியாக எழுச்சி பெற்றுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், குறித்த சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினரின் கருத்துக்கு இடையூறு விளைவித்த நபர் ஒருவரை அந்த இடத்திலிருந்து செல்லுமாறும் அவர் உத்தரவிட்டுள்ளார்.


No comments:

Post a Comment