Recent Posts

Search This Blog

குரங்குகளைப் பிடிக்க விசேட பயற்சி.

Sunday, 16 April 2023


சீனாவிலுள்ள உயிரியல் பூங்காக்களுக்கு ஒரு இலட்சம் குரங்குகளை வழங்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், குரங்குகளைப் பிடிப்பதற்காக தூரத்திலிருந்து இயக்கக்கூடிய சிறப்பு வகை கூடுகளை அறிமுகப்படுத்தவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.


குறித்த கூடுகளைப் பயன்படுத்தி குரங்குளை பிடிப்பதற்காக விசேட பயற்சிகளும் வழங்கப்படவுள்ளதாக அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட ப்பட்டுள்ளது.


பயிர்களை சேதப்படுத்தும் குரங்களை அகற்றும் பணிகளுக்கு அனைத்து விவசாய அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்தது.

வன விலங்குகளுக்கு ஏற்படும் பாதிப்பை குறைக்கும் வகையில், அவற்றுக்கு உணவளிப்பதற்கு ஏதுவாக அனைத்து பயிர் நிலங்களிலும் அரை ஏக்கர் நிலத்தை ஒதுக்க வேண்டும் என விலங்கு நல அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளதாக அமைச்சு அறிவித்துள்ளது.


சீனாவிலுள்ள உயிரியல் பூங்காக்களுக்கு ஒரு இலட்சம் குரங்குகளை வழங்குமாறு விடுக்கப்பட்ட யோசனை தொடர்பில் பரிந்துரைகளை முன்வைப்பதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.


வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம், தேசிய மிருகக்காட்சி சாலை திணைக்களம், விவசாய அமைச்சு மற்றும் விவசாய திணைக்களம் உள்ளிட்டவற்றின் பிரதிநிதிகள் இந்த குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.

இலங்கை டோக் குரங்குகளை வெளிநாட்டுக்கு வழங்குவது தொடர்பான சட்ட நிலைமைகளை ஆராய்வதற்காக அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் குழுவொன்றை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்திருந்தார்.


இந்த குழுவில் அமைச்சு, விலங்கியல் திணைக்களம், வனவிலங்கு திணைக்களம் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் ஆகியவற்றின் அதிகாரிகளையும் உள்ளடக்கியிருக்க வேண்டுமென அமைச்சர் குறிப்பிட்டார்.



No comments:

Post a Comment