Recent Posts

Search This Blog

இலங்கையில் தங்கத்தின் விலையில் பாரிய வீழ்ச்சியடைந்து நகைக்கடைகள், தங்க அடகு கடைகளில் நெருக்கடி நிலை.

Friday, 10 March 2023


உலக தங்கத்தின் விலையுடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலரின் பெறுமதி குறைந்துள்ளதன் காரணமாக இலங்கையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபை தெரிவித்துள்ளது.


இலங்கையில் ஒரு வாரத்தில் தங்கம் ஒரு பவுன் விலை சுமார் 39 ஆயிரம் ரூபாவினால் குறைந்துள்ளதாக விலைமதிப்பற்ற உலோகங்கள் பகுப்பாய்வு பணியகத்தின் உதவிப் பணிப்பாளர் இந்திக்க பண்டார தெரிவித்துள்ளார்.


ஆனால், தங்கம் விலை குறைவால், நகைக்கடைகள், தங்க அடகு கடைகளில் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நேற்றைய நிலவரப்படி
கொழும்பு செட்டித் தெரு தங்கச் சந்தையில் 24 கெரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 145,000 ரூபாவாக பதிவாகியது.


அத்துடன் 22 கெரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 134,000 ரூபாவாக பதிவாகியது.


No comments:

Post a Comment