Recent Posts

Search This Blog

அவதானம் : அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள, வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த 18 வயது யுவதியை சூட்சுமமாக பேசி லொறி ஒன்றில் கடத்தி சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவம்

Friday, 10 March 2023
வாதுவ பிரதேசத்தில் லொறி ஒன்றில் கடத்திச் செல்லப்பட்டு 18 வயதுடைய யுவதி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதில் லொறியில் இருந்த சந்தேகநபர்கள் குறித்த யுவதியை பலமுறை துஷ்பிரயோகத்திற்கு உற்படுத்தியுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.


சம்பவம் தொடர்பில் லொறியின் சாரதி உட்பட மற்றுமொருவரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.


பாதிக்கப்பட்ட யுவதி களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


பாணந்துறையில் கடையொன்றில் பணிபுரியும் யுவதி வேலை முடிந்து இரவு வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த போது, ​ சிறிய லொறி ஒன்றில் வந்தவர்கள் அடையாள அட்டையைக் காட்டி, மிக சூட்சுமமாக பேசி யுவதியை லொறியில் ஏற்றிச் சென்று இந்தக் குற்றத்தை செய்துள்ளனர்.


பின்வத்தை நோக்கி லொறி சென்று கொண்டிருந்த போது, ​​தான் இறங்க விரும்புவதாக யுவதி கூறியபோதும் , வாகனத்தை நிறுத்தாமல் வாதுவ பிரதேசத்தில் உள்ள வெறிச்சோடிய தோட்டத்திற்கு யுவதியை கடத்திச் சென்றுள்ளனர்.


சம்பவத்தில் மேலதிக விசாரணைகளை பாணந்துறை தெற்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


No comments:

Post a Comment