Recent Posts

Search This Blog

சில ஊர்களில் இருந்து காணாமல்போன 10 முச்சக்கரவண்டிகள் ஒரே இடத்தில் சிக்கின.

Thursday, 23 March 2023


கினிகத்தேனை, வட்டவளை, நாவலபிட்டி, தெஹியோவிட்ட, எக்கல ஆகிய பிரதேசங்களில் காணாமல்போன ஓட்டோக்களில் 10 ஓட்டோக்கள் பலாங்கொடை பகுதியிலிருந்து
பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.


அவ்வாறு மீட்கப்பட்ட ஓட்டோக்களில், கினிகத்தேனை பிரதேசத்துக்கு உரிய 3 ஓட்டோக்களும், நாவலபிட்டி பிரதேசத்தில் இருந்த களவாடப்பட்ட 4 ஓட்டோக்களும் தெஹியோவிட்ட, எக்கல, வட்டவளை ஆகிய பிரதேசங்களில் இருந்து மாயமான தலா ஒவ்வொரு ஓட்டோவும் அடங்குகின்றன.


மேற்படி பிரதேசங்களில் இருந்து காணாமல் போன ஓட்டோக்கள் அனைத்தும் பலாங்கொட பிரதேசத்தில் இருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட விசாரணைகள் மூலம் நான்கு சந்தேக நபர்களை கினிகத்தேனை ொலிஸார் கைது செய்தனர்.

அவர்கள் ஹட்டன் நீதிவான நீதிமன்றில் கடந்த 21ஆம் திகதி ஆஜர்ப் படுத்தப்பட்டனர்.


குறித்த சந்தேக நபர்களை தடுப்புகாவலில் வைத்து விசாரணை செய்வதற்கு நீதிவான் நீதிமன்றத்தால் அனுமதி வழங்கப்பட்டுள்ளதோடு தற்போது ஓட்டோக்களை ஹட்டன் நீதிமன்றில் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக​தெரிவித்த கினிகத்தேனை ப ொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



No comments:

Post a Comment