தாய் நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு வை.எம்.எம்.ஏ. மடவளை கிளையின் ஏற்பாட்டில் சுதந்திர தின நிகழ்வும் பரிசளிப்பு விழாவும் இன்று (04) சனிக்கிழமை மடவளை பஸார் மதீனா தேசிய பாடசாலை அஷ்ரப் ஞாபகார்த்த கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
மடவளை வை.எம்.எம்.ஏ.கிளையின் தலைவர் ஏ எல் எம் ரிஷார்ட் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் மடவளை பஸார் ஜும்மா பள்ளிவாசல் தலைவர் அல் ஹாஜ் நாஜிம் பிரதம அதிதியாகவும் திருமதி இக்பால் அவர்கள் விசேட அதிதியாக கலந்து கொண்டனர் இன்றைய தினம் நாற்பது மானவர்களுக்கு பாடசாலை உபகரணங்களும் பகிர்ந்தளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கடந்த வருடம் புலமைப் பரிசில் பரீட்சை எழுதிய சகல மாணவ மாணவிகளுக்கு பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டார். அதற்கான அனுசரணை வழங்கிய NORTH AMERICA MADAWALA ASSOCIATION அமைப்பினருக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
நிகழ்வுக்கு 600 இற்கும் அதிகமானோர் கலந்து கொண்டது நிகழ்ச்சியை மேலும் மெருகேற்றியது. வை எம் எம் ஏ உருப்பினர்கள் , அரச அதிகாரிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்
வை எம் எம் ஏ. செயலாளர்
ஏ எம் ஹசன் பிராஸ்



No comments:
Post a Comment