Recent Posts

Search This Blog

I முஸ்லிம் பெண்கள் சங்கம் ஸ்தாபிக்கப்பட்டது.

Tuesday, 21 February 2023
பதுளையில் முதல் தடவையாக முஸ்லிம் பெண்கள் சங்கம் ஸ்தாபிக்கப்பட்டது.


குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் உறுப்பினர்களுக்கு சுயதொழில் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுத்தல், அவர்களால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை விற்பனைச் செய்வதற்கான ஏற்பாடுகளை முன்னெடுப்பது என்பன இந்தச் சங்கத்தின் பிரதான நோக்கமாகும்.


பதுளை வை.எம்.எம்.ஏ மண்டபத்தில், 19, 20 ஆம் திகதிகளில், உற்பத்தி பொருட்கள் விற்பனை செய்யப்பட்டன. “இந்த வேலைத்திட்டம் பதுளை மாவட்டம் முழுவதிலும் முன்னெடுக்கப்படும். வறுமையில் இருக்கும் முஸ்லிம் பெண்களை ஊக்கப்படுத்துவதே இதன் பிரதான நோக்கமாகும்” என்று அகில இலங்கை முஸ்லிம் சம்மேளனத்தின் தேசிய தலைவர் இஷான் ஏ ஹமீட் தெரிவித்தார்.


No comments:

Post a Comment