நாட்டு மக்களின் அரசியல் அபிலாஷைகள், தேர்தல்
ஊடாகவே வெளிப்படுத்தப்பட வேண்டும் என்று தெரிவித்த
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற
உறுப்பினருமான விமல் வீரவன்ச, மக்களின் ஜனநாயக உரிமையை
பாதுகாக்க, பாராளுமன்றம் தலையிட வேண்டியது அவசியம் என்று
வலியுறுத்தினார்.
ஜனாதிபதியின் எண்ணப்பாட்டுக்கு அமைய தேர்தல் நடவடிக்கைகளை
தீர்மானிக்க முடியாது என்றும் அது ஜனநாயக கொள்கைக்கு எதிரானது
என்றும் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் விசேட கூற்றொன்றை முன்வைத்து
செவ்வாய்க்கிழமை (21) உரையாற்றிய போதே மேற்குறிப்பிட்ட
விடயத்தை தெரிவித்தார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு சட்டத்தின் ஊடாக தடையேற்படுத்த
அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்ததை தொடர்ந்து
நிதி நெருக்கடி என குறிப்பிட்டுக் கொண்டு
தேர்தல்
நடவடிக்கைகளுக்கு
அரசாங்கம் தற்போது
தடையேற்படுத்தியுள்ளது
என்று கூறினார்.
எதிர்வரும் காலங்களில்
இடம்பெறவுள்ள
பொதுத் தேர்தலையும்,
ஜனாதிபதி தேர்தலையும்
அரசாங்கம் பிற்போடும்.
அப்போதும் நிதி
இல்லை என்ற தர்க்கமே
முன்வைக்கப்படும்
என்றார்.
பொதுத்தேர்தலை
பிற்போட
வேண்டுமானால் அதற்கு
மக்கள் வாக்கெடுப்பு
நடத்த வேண்டும். மக்கள்
வாக்கெடுப்பை நடத்தவும்
நிதி இல்லை என்று
ஜனாதிபதி குறிப்பிடுவார்
என்றும் விமல் எம்.பி
சுட்டிக்காட்டினார்.
நிதி இல்லை; ஆகவே
பாராளுமன்றத்தின்
செயற்பாடுகளை
இடைநிறுத்ததுவதாக
ஜனாதிபதி
குறிப்பிட்டாலும்
ஆச்சரியமடைய
வேண்டியதில்லை.
அவ்வாறான மனநிலையில்
தான் அவர் உள்ளார்.
அரசாங்கத்தின்
முறையற்ற வரி
கொள்கை, மின்கட்டண
அதிகரிப்பு ஆகியவற்றால்
நாட்டு மக்கள்
விரக்தியடைந்துள்ளனர்
எனவும்
சுட்டிக்காட்டினார



No comments:
Post a Comment