Recent Posts

Search This Blog

பரீட்சை மேற்பார்வையாளரின் பதிலால் அதிர்ச்சி அடைந்தேன் என மாணவி ஒருவர் மாத்தளை தலைமையக பொலிஸில் முறைப்பாடு.

Thursday, 2 February 2023


மாத்தளையில் உள்ள தேசிய பாடசாலை ஒன்றில், உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவி ஒருவர், பரீட்சை மேற்பார்வையாளர் ஒருவருக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளார்.


வினாத்தாளுக்கு விடை எழுதும்போது, மேலதிகமாக விடைத்தாள் கேட்டபோது, அவர் அதற்கு " இவள் எதற்கு இவ்வளவு பேப்பர் கேற்கிற .. என்ன எழுதப் போறதோ தெரியா என்ற  மேற்பார்வையாளர் பதிலால் தான் அதிர்ச்சியடைந்ததாக மாணவி தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.


தர்க்கவியல் வினாத்தாளுக்கு விடைகளை எழுதும்போது, பரீட்சை நிலைய மேற்பார்வை செயற்பட்ட விதத்தின் காரணமாக  தான் பாடத்தை மறந்துவிட்டதாக இந்த மாணவி முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.


எவ்வாறாயினும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக மாத்தளை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். 



No comments:

Post a Comment