மொனராகலை பிரிவுக்குட்பட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் (SSP) ஒருவர் பெருமளவான கஞ்சா உடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையின் (STF) அதிகாரிகளால் SSP கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் SSP நிஹால் தல்துவா தெரிவித்தார்.
அவரிடம் 350 கஞ்சா செடிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக நிஹல் தல்துவ மேலும் தெரிவித்தார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் (CID) குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.



No comments:
Post a Comment