Recent Posts

Search This Blog

ஏற்பட்டிருந்த காகிதத் தட்டுப்பாடு, தற்போது கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது... அரச தரப்பில் விளக்கம்.

Tuesday, 17 January 2023


பிறப்புச் சான்றிதழ் விண்ணப்பம் நிறைவடைந்துள்ளதால், இறப்புச் சான்றிதழ் விண்ணப்பத்தில், பிறப்புச் சான்றிதழ் எனக் குறிப்பிட்டு, அவசியமான தகவல்களை வழங்குமாறு, சம்பந்தப்பட்ட அலுவலகங்களில், காட்சிப்படுத்தப்பட்டுள்ள சில அறிவித்தல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன.

பதிவாளர் நாயகம் திணைக்களத்தின், விண்ணப்ப அவசியத்தன்மை அடிப்படையில், பிறப்பு மற்றும் இறப்புச் சான்றிதழ் விண்ணப்பம், அரச அச்சுத் திணைக்களத்தினால் அச்சிடப்படுவது வழமையான நடைமுறையாகும்.

இந்த நிலையில், பிறப்புச் சான்றிதழ் விண்ணப்பம் முடிவடைந்துள்ளதாக, சமூக வலைதளங்களில் வெளியாகும் தகவல் குறித்து, எமது செய்திச் சேவை, அரச அச்சுத் திணைக்களத்திடம் வினவியது.

இதன்போது பதிலளித்த அந்தத் திணைக்களம், பதிவாளர் நாயக திணைக்களம் வழங்கிய அனைத்து விண்ணப்பக் கட்டளைகளும் அச்சிடப்பட்டு மீள வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தது.

நிலவும் டொலர் பற்றாக்குறை காரணமாக, கடந்த நாட்களில் ஏற்பட்டிருந்த காகிதத் தட்டுப்பாடு, தற்போது கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வழங்கப்படுகின்ற அச்சுக் கட்டளைகளுக்கு அமைய, நாளாந்தம் அச்சுப் பணிகள் இடம்பெறுவதாக அரச அச்சுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.


No comments:

Post a Comment