Recent Posts

Search This Blog

தன் பிள்ளைகளை பாடசாலையில் விட்டுவிட்டு திரும்பும் வழியில் தந்தை சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம்... #இலங்கை

Wednesday, 11 January 2023


பாணந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெம்பனை, களுகலஹேன பிரதேசத்தில் 50 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் இன்று காலை சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.


மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் தனது இரண்டு பிள்ளைகளை பாடசாலையில் விட்டுவிட்டு திரும்பிக் கொண்டிருந்த வேளையில் சுட்டுக்கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.


உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியை பயன்படுத்தி சுட்டுக்கொல்லப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.


நீதவான் விசாரணை எம்பிலிபிட்டிய நீதவானினால் மேற்கொள்ளப்பட்டதுடன், பிரேத பரிசோதனையை தங்காலை வைத்தியசாலையில் நீதித்துறை வைத்திய அதிகாரி மேற்கொள்ளவுள்ளார்.


கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பாணந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


No comments:

Post a Comment