நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெஸ்போட் கீழ்ப் பிரிவில் ஸ்ரீ கருமாரி அம்மன் ஆலயம் உடைக்கப்பட்டு அம்மன் சிலையின் தங்க நகைகள், உண்டியல் பணம் ஆகியவை கொள்ளையிடப்பட்டுள்ளதாக ஆலய நிர்வாகத்தினால் நானுஓயா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
நேற்றிரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், அத்தோடு சம்பவம் தொடர்பில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை எனவும், விசாரணைகளை மேற்கொள்ளும் நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.
ஆலயத்தின் பின் நுழைவாயில் உடைக்கப்பட்டு உள்ளே நுழைந்த இனந்தெரியாதவர்கள் ஆலயத்தில் 30.000 பெறுமதியான அம்மனுக்கு அணிவிக்கப்பட்டிருந்த தாலி மற்றும் ஆலய முன்றலில் வைக்கப்பட்டிருந்த உண்டியல் உடைக்கப்பட்டு பணமும் திருடப்பட்டுள்ளன.
இதேவேளை, இதற்கு முன்னரும் கூட குறித்த ஆலயத்தில் திருட்டுச் சம்பவம் இடம்பெற்று தங்க நகைகள், உண்டியல் உடைக்கப்பட்டு, காணிக்கை பணம் திருட்டு போயிருந்தமை தொடர்பில் நானுஓயா பொலிஸ் நிலையத்தில், முறைப்பாடு செய்யப்பட்டிருந்ததாகவும், இருப்பினும், அது தொடர்பில் பொலிஸார் ஆக்கபூர்வமான நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை எனவும் ஆலய நிர்வாகத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணகைளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நானுஓயா நிருபர்



No comments:
Post a Comment