கந்தளாய் யூசுப்
கொழும்பிலிருந்து திருகோணமலை பகுதிக்கு 10 கிராம் ஹேரொயின் போதைப்பொருளை கொண்டு சென்ற ஒருவர் கைது.
கொழும்பிலிருந்து திருகோணமலை பகுதிக்கு 10 கிராம் ஹேரொயின் போதைப் பொருளை கொண்டு சென்ற ஒருவரை கந்தளாயில் வைத்து இன்று(4) கைது செய்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பத்து கிராம் ஹேரொயின் போதைப்பொருளை 100 பைக்கட்டுகளில் இட்டு மலவாயில் ஊடாக மறைத்து கொண்டு சென்ற போதே போதே கந்தளாய் இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கமைய சந்தேக நபரை பத்து கிராம் ஹேரொயின் போதைப் பொருளுடன் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்
சந்தேக நபர் கொழும்பிலிருந்து திருகோணமலைக்கு பயனிகள் பஸ்சொன்றில் ஹேரொயின் போதைப் பொருளை கொண்டு சென்ற போதே கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கந்தளாய் இராணுவ புலனாய்வு பிரிவினர் சந்தேக நபரை கைது செய்து கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனன்.
கந்தளாய் பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்ட அதிகூடிய ஹேரொயின் போதைப் பொருள் தொகை இதுவாகும் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு கந்தளாய் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.



No comments:
Post a Comment