Recent Posts

Search This Blog

வங்காள விரிகுடாவில் தாழமுக்கம்... சில பிரதேசங்களில் மழை.

Saturday, 28 January 2023


சப்ரகமுவ மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரேலியா மாவட்டங்களின் சில இடங்களிலும் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

கடல் பிராந்தியங்களில்
****************************

வங்காள விரிகுடாவின் தென்கிழக்கு கடல் பிராந்தியத்திற்கு மேலாக தாழ் அமுக்கப் பிரதேசம் நிலைகொண்டுள்ளது. இது மேற்கு ‐ வடமேற்குத் திசையினூடாக நகர்வதுடன் நாளைமறுதினமளவில் மேலும் தீவிரமடைந்து தாழ் அமுக்கமாக வங்காள விரிகுடாவின் தென் மேற்குப் பகுதியில் நிலைகொள்ளும்.

இந்த தாழ் அமுக்கமானது எதிர்வரும் 1 ம் திகதியளவில் இலங்கையின் கிழக்கு கரையை அண்மித்ததாக மேற்கு ‐ வடமேற்குத் திசையினூடாக படிப்படியாக நகரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வங்காள விரிகுடாவின் தென்கிழக்குப் பகுதியில் மணித்தியாலத்திற்கு 40 ‐ 45 km வேகத்தில் காற்று வீசும். காற்றின் வேகமானது மணித்தியாலத்திற்கு 60 km ஆக அதிகரித்தும் காணப்படும்.

இக் கடல் பிராந்தியங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்வதுடன் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.

ஆகையினால் இக் கடல் பிராந்தியங்களுக்கு மீனவர்களும் கடல்சார் ஊழியர்களும் அடுத்துவரும் 24 மணித்தியாலங்களுக்கு செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றனர்.

கலாநிதி மொஹமட் சாலிஹீன்,
சிரேஸ்ட வானிலை அதிகாரி.


No comments:

Post a Comment