Recent Posts

Search This Blog

இரு பஸ்களின் ரேஸ் விபத்தில் முடிந்தது... இரு உயிர்கள் ஊசல்.

Thursday, 12 January 2023


 அளுத்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட களுவாமோதர பாலத்தில் இன்று (12) காலை வாகன விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.


மாத்தறையில் இருந்து கொழும்பு நோக்கி வந்த இ.போ.சபைக்கு சொந்தமாக பஸ்ஸுக்கு பின்னால் வந்த, பெலியத்த - கொழும்பு பயணிகள் போக்குவரத்து பஸ், கவனக்குறைவாக பாலத்தின் மீது இ.போ.சபைக்கு சொந்தமான பஸ்ஸை முந்திச்செல்ல முற்பட்ட போது முன்னால் வந்த முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.

முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் படுகாயமடைந்து களுத்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


விபத்தையடுத்து பஸ்ஸின் சாரதியும் நடத்துனரும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக அளுத்கம பொலிஸார் தெரிவித்தனர்.


விபத்து காரணமாக காலி-கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்து நடவடிக்கைகள் களுவாமோதர பகுதியில் சுமார் ஒரு மணிநேரம் தடைப்பட்டிருந்தது.


சம்பவம் தொடர்பில் அளுத்கம பொலிஸ் போக்குவரத்து பிரிவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



No comments:

Post a Comment