Recent Posts

Search This Blog

முச்சக்கர வண்டி கோர விபத்து... பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி.. மேலும் மூன்று பெண்கள் பலத்தகாயம்.

Thursday, 12 January 2023
பதுளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஜெயசேகெதர சந்தியில் முச்சக்கர வண்டி ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் 59 வயது பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.



பதுளை கிரிஒருவ பகுதியில் இருந்து பதுளை நோக்கி பூப்புனித நீராட்டு விழாவுக்கு முச்சக்கரவண்டியில் சாரதி உட்பட ஐவர் பயணித்துள்ளனர்.



குறித்த முச்சக்கர வண்டி ஜெயசேகெதர சந்திக்கு அருகாமையில் வீதியை விட்டு விலகி வடிகான் ஒன்றில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் பதுளை ஒளியமண்டி பகுதியைச் சேர்ந்த 59 வயதுடைய பெண் ஒருவர் பலியானதோடு 65 வயதுடைய சாரதி 58 ,46, 28 வயதுடைய மூன்று பெண்கள் பலத்த காயமடைந்து பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.



இச்சம்பவம் நேற்று புதன்கிழமை மதியம் 12.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதோடு மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


No comments:

Post a Comment