Recent Posts

Search This Blog

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டிருந்த "எட்டிகுப்பா" கொலை... பிரதேசவாசிகள் பால் பொங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Saturday, 14 January 2023


வாரியபொல, வெலவ பிரதேசத்தில் இரு குழுக்களுக்கிடையில் நேற்று (13) பிற்பகல் இடம்பெற்ற மோதலில் 33 வயதுடைய நபர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

மோதலின் பின்னர், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட நபர் உயிரிழந்தமை தொடர்பில் பிரதேசவாசிகள் குழுவொன்று மகிழ்ச்சியை வெளிப்படுத்திய சம்பவம் ஒன்றும் பதிவாகியுள்ளது.


கொல்லப்பட்டவர் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டிருந்த "எட்டிகுப்பா" என அழைக்கப்படும் சமரு ருவன் பத்திரன என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த மோதலின் போது அவரது சகோதரர், மூத்த சகோதரி மற்றும் மற்றுமொருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 5 இளைஞர்களை விடுவிக்கக் கோரி பிரதேச மக்கள் இன்று (14) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களால் கிராம மக்கள் தொடர்ந்து துன்புறுத்தப்பட்டு வருவதாகவும், இதன் காரணமாக இரு குழுக்களிடையே சிறிது நேரம் தகராறு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


No comments:

Post a Comment