Recent Posts

Search This Blog

ரொனால்டோவை தொடர்ந்து சௌதி பக்கம் தாவும் மெஸ்ஸி

Wednesday, 4 January 2023

சவூதி அரேபிய அல் ஹிலால் கழகம் சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவரான லியோனல் மெஸ்ஸியுடன் ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் எதிர்காலத்தில்  அந்த கழக அணியில் அவர் இணையவுள்ளதாகவும் இத்தாலிய செய்தித்தாள் ஒன்றை மேற்கோள் காட்டி பல சமூக ஊடக கணக்குகள் செய்தி வெளியிட்டுள்ளன. 


கிறிஸ்டியானோ ரொனால்டோ அல் நாசருடன் இணைந்த உடனேயே அல் ஹிலால் கிளப் மெஸ்ஸியின் பெயர் பொறித்த தங்கள் கிளப் டி சேர்ட்களை விற்பனைக்கு விட ஆயத்தமாகி வருவதாக கூறப்படுகிறது.


இத்தாலிய செய்தித்தாள் "கால்சியோமெர்காடோ" படி, 


அல் ஹிலால் கிளப் மெஸ்ஸியுடன் தனது அணியில் சேர ஒரு ஒப்பந்தத்தை எட்டியுள்ளது, இது வரலாற்றில் மிக உயர்ந்ததாக இருக்கும். சவூதி அரேபியாவில் உள்ள அல் நாஸ்ர் கிளப்பின் மிகப்பெரிய போட்டியாளரான லியோனல் மெஸ்ஸியை அதன் வரிசையில் சேருமாறு அல் ஹிலால் எதையும் செய்வார் என்று இதே செய்தித்தாள் முன்பு கூறியது குறிப்பிடத்தக்கது.



No comments:

Post a Comment