2023 ஆம் ஆண்டு இருண்டதாக இருக்கும், ஏனெனில் இலங்கை கடன்களை மறுசீரமைக்க கடன் வழங்குநர்களுடன் புரிந்துணர்வை ஏற்படுத்துவதற்கான எந்த அறிகுறியும் இல்லை. அதே நேரத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் உதவிக்கு இன்னும் உத்தரவாதம் இல்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
இந்தாண்டு ஜனவரியில் இலங்கை சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பெறுவதற்கான உறுதியான அறிகுறி எதுவும் இல்லை, அதே நேரத்தில் கடனாளர்களுடன் உடன்படிக்கைக்கான எந்த அறிகுறியும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
“இந்தாண்டு 20,000 வணிகங்கள் வீழ்ச்சியடையும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது” என்றும் அவர் குறிப்பிட்டார்.
மார்ச் மாதத்தில் பாராளுமன்றத்தைக் கலைக்க ஜனாதிபதி தனக்கு கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


No comments:
Post a Comment