Recent Posts

Search This Blog

கட்டார் உலகக் கிண்ணம் Vs இஸ்லாமோபோபியா.

Monday, 12 December 2022


- அஷ்ரப் ஷிஹாப்தீன் -
கட்டாருக்கெதிராகத் மேற்கு நாடுகளால் தெரிவிக்கப்பட்ட 
குற்றச் சாட்டுகள்
 அநேகமாகவும் இஸ்லாமோபோபியாவின் பாற் பட்டது என்பதை கட்டார் நிறுவி வருகிறது.

அறபுகளின் பாரம்பரிய விருந்தோம்பல், சகலரையும் சமமாக மதித்தல், வரவேற்பு, சுதந்திரமான நடமாட்டம் எனப் பல காரணிகள் அறபுகள், முஸ்லிம்கள், இஸ்லாம், கலாசாரம், உணவு என்று எல்லா வகையிலும் வெற்றி பெற்றிருக்கிறது.


இவற்றைப் பல யூடீயூபர்கள் நேரடியாகப் பேசுவதைக் காணக் கூடியதாக இருந்தது. “உலகத்தின் ஒரு பகுதியில் மட்டுமே சரியானவர்கள், நீதியானவர்கள் என்று அவர்களே சொல்லிக் கொண்டிருப்பதில் என்ன அர்த்தம் இருக்கிறது. உலகின் மற்றொரு பகுதியில் எவ்வளவு கண்ணியமான, பெருந்தன்மையுள்ள மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை அறிந்து நான் ஆச்சரியப்பட்டுப் போனேன. மேற்கத்தேய மீடியாக்கள் எவற்றையும் அடியோடு நிராகரிக்க வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம். குறிப்பாக பி.பி.சி,
 சி.என்.என் போன்றவை உண்மைக்கு மாறான தகவல்களையே எங்களுக்குச் சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.


ஓர் அற்புதமான தேசம் இது, அற்புதமான மக்கள், அற்புதமான கலாசாரம் ஆகியவற்றை நேரில் காணக் கிடைத்தது பெரும் பாக்கியம் என்றே கருதுகிறேன், என்கிறார் இங்கிலாந்து யூடியுபர் ஒருவர்.


No comments:

Post a Comment