கொள்ளுப்பிட்டியில் நேற்று இடம்பெற்ற கோர விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் கொள்ளுப்பிட்டி பொலிஸார், விபத்தை தொடர்ந்து பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்ற காரின் சாரதியை இன்னும் கைது செய்யவில்லை என தெரிவித்து இருந்தனர்
இந்நிலையில்
கொள்ளுப்பிட்டி பென்ஸ் கார் - முச்சக்கரவண்டி விபத்தின் பின்னர், பென்ஸ் காரை ஓட்டிச் சென்ற கோடீஸ்வர வர்த்தகர் நாட்டை விட்டு தப்பிச் சென்றமைக்கான சந்தேகத்திற்கிடமான ஆதாரம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப் படுகிறது.
விபத்து குறித்து விசாரணை நடத்தி வரும் போலீசார், ஓடிய காரை ஓட்டி வந்தவர் கோடீஸ்வர தொழிலதிபர் என்றும், உண்டியல் முறை மூலம் பண மோசடியில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கூறியிருந்தனர்.
விபத்தின் பின்னர் தெஹிவளை மற்றும் வெல்லம்பிட்டிய பிரதேசத்தில் சந்தேகநபருக்கு சொந்தமானது என நம்பப்படும் இரண்டு வீடுகளை சோதனையிடச் சென்ற பொலிஸார், அவர் அங்கு இல்லாத காரணத்தினால் வெறுங்கையுடன் திரும்பினர் .
பென்ஸ் காரை ஓட்டி வந்த இந்த கோடீஸ்வரர் முகமது ரசூல் முகம்மது ரிசாக் தற்போது நாட்டை விட்டு தப்பியோடிவிட்டதாக சந்தேகம் எழுந்துள்ளது.
அவரது கைத்தொலைபேசிக்கு அழைப்புகள் மேற்கொள்ளப்படும் போது, அவர் வெளிநாடு சென்றுள்ளதாகவும், ரோமிங் வசதி மூலம் அழைப்பு இணைக்கப்படும் எனவும், பதிவு செய்யப்பட்ட அறிவிப்பு வெளியாகி, தப்பிச் செல்வதற்கு முன், அதனை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை என சந்தேகம் எழுந்துள்ளது.
இது தொடர்பாக விசாரணை நடத்தி வரும் போலீசார் அவரை இலங்கையில் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
மூன்று இரவு விடுதிகளுக்குச் சென்று மது அருந்தியதாகக் கூறப்படும் 5 பேர் கொண்ட குழுவை ஏற்றிச் சென்ற பென்ஸ் ரக கார் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் நேற்று முந்தினம் (10) கொள்ளுப்பிட்டி, அல்பிரட் மாவத்தையில் முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானது.
முச்சக்கர வண்டி சாரதி நூர்தீன் துவான் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
News : Gossip lanka news




No comments:
Post a Comment