Recent Posts

Search This Blog

நாடளாவிய ரீதியிலுள்ள தேசிய பயிலுனர் கைத்தொழில் பயிற்சி அதிகார சபை (NAITA) கிளைகளால் பின்வரும் பாடநெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரல்.

Tuesday, 20 December 2022


(ரிஹ்மி ஹக்கீம்)

நாடளாவிய ரீதியிலுள்ள தேசிய பயிலுனர் கைத்தொழில் பயிற்சி அதிகார சபை (NAITA) கிளைகளால் பின்வரும் பாடநெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளன.

Weldor
Aluminium Fabricator
Caregiver
Field Assistant
vehicle Interior Cleaner

குறித்த பாடநெறிகள் ஒவ்வொன்றும் ஆறு மாத காலத்தை கொண்டதாகும். அதனை தொடர்ந்து பாடநெறியை பூர்த்தி செய்தவர்களுக்கு தேசிய இளைஞர் படையணி (National Youth Corps) கிளைகளில் ஒன்றரை மாதங்கள் பயிற்சி வழங்கப்படுவதுடன், அதனை தொடர்ந்து நான்கு மாதங்கள் தொழிற்பயிற்சி வழங்கப்படும்.

பாடநெறிகள் முற்றிலும் இலவசமாக நடைபெறும் என்பதுடன், சமுர்த்தி பெறும் குடும்பங்களை சேர்ந்த மாணவர்களுக்கு மாதாந்தம் ரூபா 4,000 கொடுப்பனவு வழங்கப்படும்.

தகவல் : NAITA நிறுவனத்தின் கம்பஹா மாவட்ட அலுவலகம்

மேலதிக விபரங்களுக்கு NAITA நிறுவனத்தின் மாவட்ட அலுவலகங்களை தொடர்பு கொள்ளவும்.

மாவட்ட அலுவலகங்களின் தொடர்பு விபரங்கள்: https://naita.gov.lk/contact/district-offices/


--
Thanks & Best Regards,
Rihmy Hakeem


No comments:

Post a Comment