" மாண்டேஸ் " சூறாவளியானது இன்று அதிகாலையில் தமிழ் நாட்டின் வட பகுதி, புதுச்சேரி மற்றும் ஆந்திரப் பிரதேசத்தின் தென் பகுதி போன்ற பிரதேசங்களை ஊடறுத்து சென்றுள்ளது. இது இன்று காலையளவில் படிப்படியாக நலிவடைந்து பலமிக்க தாழ் அமுக்கமாக மாறுவதுடன் நன்பகல் வேளையில் தாழ் அமுக்கமாக மாற்றமடைந்து அதன் செயற்பாடு குறைவடைந்து செல்லும்.
இதன் தாக்கத்தின் காரணமாக வட மாகாண கடல் பிராந்தியங்களிலும் அத்துடன் மன்னார் தொடக்கம் கொழும்பு, காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடல் பிராந்தியங்களிலும் பலத்த காற்று வீசுவதுடன் இக் கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பாகவும் காணப்படும்.
வங்காள விரிகுடாவின் தென்மேற்குப் பகுதியில் உள்ள ஆழ்கடல் பிராந்தியங்களில் கடல் அலையானது 2.5 ‐ 3.5 m உயரத்திற்கும் காலி தொடக்கம் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் கடல் அலையானது 2.0 ‐ 2.5 m உயரத்திற்கும் மேலெளக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
ஆகையினால் வட கடல் பிராந்தியத்திற்கும் அத்துடன் மன்னார் தொடக்கம் கொழும்பு, காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடல் பிராந்தியங்களுக்கும் செல்லும் மீனவர்களும் கடல்சார் ஊழியர்களும் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
இதன் தாக்கமானது நாட்டிலும் நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களிலும் படிப்படியாக குறைவடையக்கூடும்.
மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும்.
வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்.
வடக்கு, வடமத்திய, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் மணித்தியாலத்திற்கு 40 km வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கலாநிதி மொஹமட் சாலிஹீன்
சிரேஸ்ட வானிலை அதிகாரி.



No comments:
Post a Comment