Recent Posts

Search This Blog

பல்கலைக்கழக விரிவுரையாளர் ஓட்டிச் சென்ற கார் கடலில் வீழ்ந்த சம்பவம்.

Sunday, 18 December 2022


மாத்தறை கதிர்காமம் பிரதான வீதியில் பல்கலைக்கழக விரிவுரையாளர் ஓட்டிச் சென்ற கார் இன்று பிற்பகல் வெல்லமடம் கடலில் வீழ்ந்ததில் பல்கலைக்கழக விரிவுரையாளர் காயமடைந்துள்ளதாக மாத்தறை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தினால் அதிர்ச்சியடைந்த 50 வயதுடைய நபர் மருத்துவ சிகிச்சைக்காக மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தெவிநுவரவில் இருந்து மாத்தறை நோக்கி வந்து கொண்டிருந்த போது கார் வீதியை விட்டு விலகி கடலில் விழுந்துள்ளது.

எனினும் கடற்கரை அருகில் இருந்தவர்கள் ஓட்டுநர் இருக்கையில் இருந்த அவரை காப்பாற்றி கரைக்கு கொண்டு வந்தனர்.


No comments:

Post a Comment