Recent Posts

Search This Blog

திருமணத்துக்கு அப்பாற்பட்ட பாலியல் உறவு, திருமணம் செய்யாமல் இணைந்து வாழ்தல் தடை - மீறினால் சிறை தண்டனை

Sunday, 4 December 2022



திருமணத்துக்கு அப்பாற்பட்ட பாலியல் உறவு, திருமணம் செய்யாமல் இணைந்து வாழ்தல்  தடை  - மீறினால் சிறை தண்டனை 

  இந்தோனேசியாவில் `திருமணத்துக்கு அப்பாற்பட்ட பாலியல் உறவை தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கும் சட்டமூலம் 2019ஆம் ஆண்டு அந்நாட்டு நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது.


 எனினும் குறித்த சட்ட மூலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கு பெரிய அளவில் போராட்டங்கள் வெடித்தன. 


இதனால் அந்த சட்டமூலம் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் குறித்த சட்ட மூலமானது இந்தோனேசியா நாடாளுமன்றத்தில் மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ளது. 


அந்தவகையில் இச்சட்டமூலம் எதிர்வரும் 15ஆம் திகதி நிறைவேற்றப்படும் எனவும், இதன் மூலம் திருமணத்துக்கு அப்பால் பாலியல் உறவு வைத்துகொள்வதும், திருமணத்திற்கு முன் இணைந்து வாழ்வதும் சட்டவிரோதமாகக் கருதப்படுமெனவும் நிதி அமைச்சர் எட்வர்ட் உமர் ஷெரீப் ஹியாரிஜ் தெரிவித்துள்ளார். 


அத்துடன் இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்களுக்கு ஓர் ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 



No comments:

Post a Comment