Recent Posts

Search This Blog

நானும் பொதுஜன பெரமுன உறுப்பினர்களும் தேர்தலுக்கு தயார்... ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து போட்டியிட ஆலோசனை கிடைத்துள்ளது.

Tuesday, 20 December 2022


உள்ளூராட்சி மன்றத்
தேர்தலுக்கு ஸ்ரீ லங்கா
பொதுஜன பெரமுன
தயாராக இருப்பதாக
தெரிவித்த அமைச்சரும்
அமைச்சரவை
பேச்சாளருமான பந்துல குணவர்தன,
மக்கள் பிரதிநிதி என்ற வகையிலும்
பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையிலும் தான் உள்ளிட்ட தனது
கட்சியின் உறுப்பினர்களும் தேர்தலை
எதிர்கொள்ளத் தயாராக உள்ளன.


அரசாங்கத் தகவல் திணைக்களத்தில்
செவ்வாய்க்கிழமை (20) நடைபெற்ற
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும்
வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே
அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து தெரிவித்த அவர்,
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மக்கள்
பிரதிநிதிகள் என்ற வகையில், தமது கட்சி
தேர்தலுக்கு தயாராக இருப்பதாகவும்
ஐக்கிய தேசிய கட்சி உள்ளிட்ட
ஏனைய கட்சிகளுடன் கூட்டிணைந்து
அத்தேர்தலுக்கு முகம் கொடுக்க தயாராக
இருக்குமாறு கட்சி தலைவரிடமிருந்து
ஆலோசனை கிடைத்துள்ளது என்றார்.


No comments:

Post a Comment