வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் அடிக்கடி மழை பெய்யக்கூடும்.
மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களின் பல இடங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் பல இடங்களிலும் பிற்பகல்அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
வடக்கு, கிழக்கு, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் 50 mm இலும் கூடிய ஓரளவு பலத்த மழை பெய்யலாம் எனஎதிர்பார்க்கப்படுகிறது.
பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
கடல் பிராந்தியங்களில்
****************************
வங்காள விரிகுடாவின் தென் பகுதியில் நிலைகொண்டுள்ள தாழ் அமுக்கப் பிரதேசமானது மேற்கு ‐ வடமேற்குத் திசையினூடாக மெதுவாக நகர்ந்து அடுத்துவரும் சில தினங்களில் இலங்கையின் கரைப்பகுதியை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வங்காள விரிகுடாவின் மத்திய மற்றும் தென்மேற்கு ஆழ்கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 ‐60 km இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசுவதுடன் இடியுடன் கூடிய மழையும் பெய்யக்கூடும்.
ஆகையினால் குறிப்பிட்ட இக் கடல் பிராந்தியங்களுக்கு செல்லும் மீனவர்களும் கடல்சார் ஊழியர்களும் மிகவும் அவதானத்துடன் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
மேலும் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் எதிர்காலத்தில் வெளிவிடப்படுகின்ற முன்னறிவிப்புக்களை கவனதிற் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்படுகின்றனர்.
காங்கேசன்துறை தொடக்கம் திருகோணமலை, மட்டக்களப்பு, பொத்துவில் ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிமழை பெய்யக்கூடும்.
கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 ‐ 40 km வேகத்தில் வடகிழக்குத் திசையில் இருந்து காற்று வீசும்.
கொழும்பு தொடக்கம் புத்தளம், காங்கேசன்துறை, திருகோணமலை, மட்டக்களப்பு, பொத்துவில் ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 ‐ 55 km இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக்கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பாக் காணப்படும்.
நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்கள் இடைக்கிடையே ஓரளவு கொந்தளிப்பானநிலையில் காணப்படும்.
கலாநிதி மொஹமட் சாலிஹீன்,
சிரேஸ்ட வானிலை அதிகாரி.



No comments:
Post a Comment