கந்தளாய் யூசுப்
அடைமழையால் கந்தளாயில் பல வீடுகளுக்குள் நீர் புகுந்துள்ளது.
கந்தளாயில் இரண்டு நாள் இடைவிடாமல் கொட்டிய மழையால், கந்தளாயில் பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இதனால் தம்பலகாமம் முள்ளிப்பொத்தானை மற்றும் கந்தளாய் சூழ உள்ள அதனை ஒட்டியே மூன்றாம் கொலனி மதுரசா நகர் ரஜஎல அணைக்கட் பல கிராம பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்களை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.
மேலும், கந்தளாய் நகரை அண்டிய தாழ் நிலங்களில் கிராமங்களிலும், மழை வெள்ள நீர் தேங்கியுள்ளதால், அங்குள்ள மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
இதனால் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இயல்பு வாழ்க்கையும் முடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதுவரை பிரதேச சபையோ அல்லது அரசியல்வாதியோ வடிகால்கள் அமைத்து தரவில்லை என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.



No comments:
Post a Comment