Recent Posts

Search This Blog

பிள்ளைப் பருவத்தை அபகரித்துக் கொள்(ல்)ளும் புலமைப் பரிசில்.

Tuesday, 20 December 2022


★★முபாரிஸ் ஜே.எம்.★★.

ஒரு பிள்ளை தனது ஆரம்ப நிலை வகுப்புக்களில் கல்வியில் திறமை காட்டத் தவறும் பட்சத்தில், வீட்டில் அவர்களை பயிற்சிக்கு உட்படுத்தும் சூழ்நிலையும் இல்லாத போது பிள்ளைக்கு ஒரு Go தேவை என்று நாங்கள் உணர்ந்தால் அவர்களை ஊக்குவிக்க ஒரு ஊந்து சக்தியாக (Boost) புலமைப் பரிசில் பரீட்சையை பயன்படுத்தி, அவர்களை கல்வியில் ஒரு படி தூக்கிவிட முடியும்.

மாறாக பிள்ளை நன்றாகக் கல்வி கற்கிறது, பரீட்சைகளிலும் சோபிக்கிறது என்றிருந்தால் புலமைப் பரிசில் என்ற அநாவசியமான அழுத்தம் அவர்களுக்கு அவசியமற்றது. பெற்றோரின் திருப்திக்காகவும், அந்தஸ்திற்காகவும் பிள்ளைகளின் பிள்ளைப் பருவ சந்தோஷங்களை அபகரித்துக் கொள்வது தேவையற்றது. ஒரு பிள்ளையின் உள அமைதியைக் காட்டிலும் வேறெதுவும் பெரிதல்ல.

அடிப்படையில் பரீட்சைகளை மட்டும் இலக்காகக் கொண்டு, Life Skills Development, Personality Developments, Decipline என்று எதற்குமே முன்னுரிமை வழங்காத இந்தக் கல்வி முறை என்பதே சர்ச்சைக்குரியது தான் ஆனால் இந்த முறை ஊடாகத்தான் பலரும் தம் பிள்ளைகளை பயிற்றுவிக்க வேண்டும் எனும் சூழ்நிலை இங்கு கட்டமைக்கப்பட்டிருக்கிறது. எனவே இத்தகைய பாடசாலைக் கல்விக்கு மேலதிகமாக Life Skills Development, Personality Developments, Decipline, Sports Skills போன்றவற்றிற்கு பிள்ளைகளை ஊக்கப்படுத்த வேண்டுமே தவிர மேலும் மேலும் அவர்களை பரீட்சை மைய சூழலொன்றுக்காக மிகுந்த சிரமத்தோடு பயிற்றுவிப்பது தேவையற்றது‌.

அரச பாடசாலைகளில் முறையாக முதல் நிலைக் கல்வி (Primary Education) இனை பிரத்தியேகப்படுத்தி, திட்டமிட்ட அடிப்படையில் பிள்ளைகளை பயிற்றுவிக்கும் சூழ்நிலை உருவாகும் என்றால் புலமைப் பரிசில் பரீட்சை போன்ற அநாவசியமான அழுத்தங்கள் பிள்ளைகளுக்கு நிச்சயமாக அவசியமற்றது.

எனவே தான் பரீட்சை மையக் கல்விக்காக என்று மட்டும் பிள்ளைகளை புலமைப் பரிசில் என்று இந்தளவு அழுத்தத்திற்கு உட்படுத்துவது அர்த்தமற்றது பிள்ளைகளின் உள அமைதியை சீர்குலைக்கும் அதற்கான காலம், பணம் உள்ளிட்ட அனைத்து முதலீடுகளும் எந்தப் பயனும் அற்றது.

சிறு வயது முதல் பிள்ளைகளை இவ்வாறான புரிதலோடு எங்களால் பயிற்றுவிக்க முடிந்தால் புலமைப் பரிசில் என்ற அநாவசியமான ஒன்றை முழுமையாக இல்லாது செய்துவிட முடியும். இல்லை எனில் காலத்திற்கும் புலமைப் பரிசில் அவசியமற்றது அவசியமற்றது என்று பேசிக்கொண்டு மட்டுமே இருக்க வேண்டிவரும்.

__________________
முபாரிஸ் ஜே.எம் - உலப்பனை
19.12..2022
mufarizjm@gmail.com
© https://ift.tt/iUvhBqc


No comments:

Post a Comment