Recent Posts

Search This Blog

T20 முதல் அரையிறுதி இன்று 🏏 பாகிஸ்தான் Vs நியூசிலாந்து... யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்?

Tuesday, 8 November 2022


டாக்டர் அ.ப.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்
சிவகங்கை

மழை பொழிவதற்கு வாய்ப்பு மிக மிக குறைவு

பேட்டிங் ஒப்பீட்டில் நியூசிலாந்து பாகிஸ்தானை விட பவர்ஃபுல் பேட்டிங் லைன் அப்புடன் இருப்பது போல்
தெரிகிறது

பிலிப்ஸ் 195
கேன் 132
கான்வாய் 124
அலன் 91
மிட்செல் 56
நீஷம் 37
சாண்டனர் 27
சோதி 7
சவுத்தி 5

9 பேட்ஸ்மேன்கள் இதுவரை அடித்துள்ள ரன்கள்

கேன் நின்று ஆட நேரமும் அதிக பந்துகளும் எடுத்துக் கொள்கிறார்

பிலிப்ஸ் நல்ல டச்சில் இருக்கிறார்

பாகிஸ்தானைப் பொருத்தவரை
மசூத் 134
இஃப்திகர் 114
சதாப் 78
நவாஸ் 63
ஹரிஸ் 59
பாபர் 39
சமான் 20
அஃப்ரிடி 17
வசிம் 12

பாகிஸ்தான் ஒன்பது பேட்ஸ்மேன்கள் சேர்ந்து அடித்துள்ள மொத்த ரன்கள்

இதில் இஃப்திகர் - சதாப் - நவாஸ் ஆகியோர் நல்ல டச்சில் இருக்கிறார்கள்

பாபரும் ரிஸ்வானும் பங்களாதேசுடன் கொஞ்சம் ரன் சேர்த்து ஃபார்முக்கு வந்திருப்பது போல் தெரிகிறது

சிட்னி எஸ் சி ஜி
முதலில் பேட்டிங் செய்பவர்களுக்கு சிறிது சாதகமானதாக இருக்கிறது

இந்த உலகக்கோப்பையில் நியூசிலாந்து இந்த மைதானத்தில் இரண்டு போட்டிகள் ஆடியுள்ளது
இரண்டிலும் முதலில் பேட்டிங் செய்து வென்றுள்ளது

ஆஸ்திரேலியாவுடன் 200 ரன்கள்
எடுத்து அவர்களை 111 க்கு சுருக்கியுள்ளது

ஸ்ரீலங்காவுடன் 167/7 ரன்கள் எடுத்து அவர்களை 102 க்கு சுருக்கியுள்ளது

இதன் மூலம் நியூசி டாஸ் வென்றால் கட்டாயம் முதலில் பேட்டிங் பிடித்து
அதே போன்ற முடிவைப் பெற முயற்சிக்கும்

அந்த இரண்டு போட்டிகளிலும் நியூசிலாந்தின் ஸ்பின்னர்களான
இடக்கை சாண்டனர்
மற்றும் இஷ் சோதி இருவரும் சிறப்பாக பந்து வீசி தலா ஐந்து மற்றும் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்

எஸ்சிஜி யில் பந்துகள் சுழலும் என்பதால் ஸ்பின்னர்களுக்கு கட்டாயம் கை கொடுக்கும்

பாகிஸ்தானைப் பொருத்தவரை
சதாப் 10 விக்கெட்
சஹின் 8 விக்கெட்
வசிம் 7 விக்கெட்
ரவுஃப் 6 விக்கெட்
ஷா 3 விக்கெட்
நவாஸ் 2 விக்கெட்
அகமத் 1 விக்கெட்
என்று தனது பலமாக பவுலிங் யூனிட்டை நம்பி இருக்கிறது

ஒருவேளை நியூசி முதலில் பேட்டிங் பிடித்தாலும் அவர்களை 160 க்குள் அடக்கவே முயற்சிக்கும்

இந்த பிட்ச்சில் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 160க்கு மேல் இருக்கும்

இரண்டாவது இன்னிங்கஸ் ஆவரேஜ் ஸ்கோர் 130+ மட்டுமே

எனவே டாஸ் ரொம்ப ரொம்ப முக்கியப் பங்காற்றும்

டாஸ் வென்றால் முதலில் பேட்டிங்

இரு அணிகளின் சிறப்பான பந்து வீச்சை எதிர்கொண்டு 160 ரன்களை கடப்பது

160+ எடுக்கும் ரன்கள் அனைத்தும் இரண்டாவது அணிக்கு பிரஷர் ஏற்றக்கூடும்

ஃபீல்டிங் பொருத்தவரை
பாகிஸ்தானை விட நியூசிலாந்து சிறந்த அணி
எனவே பாகிஸ்தான் சிறப்பாக முயன்று கேட்ச்களை விடாமல்
இருக்க வேண்டும்.

நியூசிலாந்தைப் பொருத்தவரை இது போன்ற செமி பைனல் பைனல்களில்
விளையாடுவது அவர்களுக்கு வாடிக்கையாகி விட்டது என்பதால்
எப்பவும் கூலாகத்தான் இருப்பார்கள்

அதுவே நமது பங்காளிகள் டென்சனாகி தவறு செய்ய அதிக வாய்ப்பு உண்டு
அதையும் குறைத்துக் கொண்டு சகஜமான ஆட்டத்தை ஆடிட வேண்டும்

பாபரும் ரிஸ்வானும் பந்துகளை ரொம்ப தின்றுவிட்டு பிறகு அடிக்கும் யுக்தி உபயோகமற்றுப் போக வாய்ப்பு அதிகம்

நியூசியைப் பொருத்தவரை கான்வாய் பிலிப் போன்றோர் எடுத்த எடுப்பிலேயே வெளுக்கக்கூடியவர்கள்

பாகிஸ்தான் தனது பலமான பவுலிங்கில் அதிக கவனம் செலுத்தி ஃபீல்டிங் சொதப்பாமல் இருக்குமானால் மேட்ச்சை தன் வசமாக்கலாம்

இதே உலகக்கோப்பையில் இங்கிலாந்துடன் 179ஐ சேஸ் செய்ய இயலாமல் நியூசிலாந்து தோற்றதையும் நினைவு கொள்ள வேண்டும்
அதே நேரத்தில் 130 அடித்த சிம்பாப்வேவை சேஸ் செய்ய இயலாமல் தோற்ற பாகிஸ்தானும் யோசிக்க வேண்டும்.

பாகிஸ்தானும் தென் ஆப்ரிக்காவின் பலமான பவுலிங்கை தாக்குப்பிடித்து
185 ரன்கள் முதல் இண்ணிங்க்ஸில் ஸ்கோர் செய்து வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
43க்கு 4 விக்கெட் வீழ்த்திருந்த வேளையில் நவாஸ் - சதாப் - இஃப்திகர் மூவரும் மேட்ச்சின் நிலையை மாற்றி அமைத்தனர்
அது போன்றதொரு இன்னிங்க்ஸ் இன்றும் அவர்களிடம் இருந்து தேவைப்படும்

இரண்டு அணிகளும் சிறப்பான ஆட்டத்தை தரும் என்பதால்
ஆட்டத்தில் பரபரப்பிற்கு குறைவு இருக்காது

வாழ்த்துகள் நியூசிலாந்து & பாகிஸ்தான்

டாக்டர் அ.ப.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்
சிவகங்கை


No comments:

Post a Comment