ஹக்மன பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் வங்கி முகாமையாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஹக்மன கெபலியபொல தெற்கு பகுதியில் உள்ள தனியார் வங்கி ஒன்றின் முகாமையாளரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
வங்கி முகாமையாளரின் கணவரே அவரது மனைவியை கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது குறித்த கணவரின் தாக்குதலில் தலையிலும், கழுத்திலும் பலத்த காயங்களுக்கு உள்ளான அவர், பிரதேசவாசிகளால் ஹக்மன கங்கொடகம பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து சந்தேக நபரான கணவர் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் ஹக்மன பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்


No comments:
Post a Comment