Recent Posts

Search This Blog

பெண் ஒருவர் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மோதியதில் பள்ளத்தில் வீழ்ந்து கவிழ்ந்த பஸ்.

Thursday, 10 November 2022


பெண் ஒருவர் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்றும், பயணிகள் பஸ் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

ஹொரணை – கொழும்பு வீதியில் கும்புக பகுதியில் இடம்பெற்ற இந்த விபத்தில் பெண் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கோனபொல-கோபிவத்த பகுதியைச் சேர்ந்த 42 வயதான பெண்ணொருவரே இவ்வாறு காயமடைந்துள்ளார்.

விபத்தையடுத்து, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் வீதியிலிருந்து விலகி பள்ளத்தில் கவிழ்ந்ததாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

விபத்தின் போது பஸ்ஸில் பயணிகள் இருந்த போதிலும் அவர்களுக்கு காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.


No comments:

Post a Comment