பேருவளை, தினகொட பிரதேசத்தில் மாணிக்கக்கல் வர்த்தகர் ஒருவரின் வீட்டிலிருந்து 3 சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் 630 தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டதுடன் சந்தேகத்தில் வர்த்தகரை கைது செய்துள்ளதாக பேருவளை பொலிஸார் தெரிவித்தனர்.
பேருவளை பொலிஸார் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, பேருவளை நகருக்கு அருகில் சந்தேகத்துக்கிடமான வகையில் பயணித்த ஒருவரை சோதனையிட்டபோது, அவரது சூட்கேஸில் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கிகளுக்கு அதற்குப் பயன்படுத்தப்படும் 50 ரவைகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இதன் பின்னர் சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்து அவரது வீட்டிலிருந்து 3 சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் 630 தோட்டாக்களும் கைப்பற்றப்பட்டதாகவும் பேருவளை பொலிஸார் தெரிவித்தனர்



No comments:
Post a Comment