வேலை நிமித்தம் காரணமாக வெளிநாடு செல்லும் உறவினரை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு செல்லும் போது 11 பேருடன் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
மீகஹதென்ன சந்தி பகுதியில் இன்று (16) இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 10 பேர் காயமடைந்துள்ளனர்.
உயிரிழந்தவர் வெளிநாட்டுக்குச் சென்ற நபருடைய மனைவியின் தாய் என எமது செய்தியாளர் தெரிவித்தார்.
மத்துகமவில் இருந்து ஹினிதும பிரதேசத்தை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த வேன், சாரதிக்கு ஏற்பட்ட நித்திரையால் வீதியை விட்டு விலகி கவிழ்ந்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
காயமடைந்தவர்கள் மீகஹதென்ன பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பின்னர் அவர்களில் சிலர் மேலதிக சிகிச்சைக்காக களுத்துறை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.



No comments:
Post a Comment