Recent Posts

Search This Blog

ஆசிரியைகள் தமக்கு வசதியான ஆடைகளை அணிந்து பாடசாலை வர அனுமதி உண்டு.. இதனால் கலாச்சாரத்திற்கு பாதிப்பில்லை.

Friday, 4 November 2022


எந்தவொரு நபருக்கும் தனக்கு ஏற்ற ஆடையை தெரிவு செய்யும் ஜனநாயக ரீதியான சுதந்திரம் இருப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


பாடசாலை ஆசிரியைகள் வசதியான ஆடைகளை அணிந்து வர அனுமதிப்பது இந்நாட்டின் கலாசாரத்திற்கு புறம்பானது என மகாசங்கத்தினர் விடுத்துள்ள கருத்துக்களுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


ஆசிரியர்களுக்கு ஆடை சுதந்திரம் அளிப்பதால் மகாசங்கத்தினர் குறிப்பிடுவது போன்று கலாசாரம் எந்த வகையிலும் அழிக்கப்படாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


No comments:

Post a Comment