யாழில் இருந்து கொழும்பு சென்ற சொகுசு பஸ் பாலத்தில்
மோதி விபத்து #மூவர் பரிதாப மரணம்!
இரவு 12.15 மணியளவில் வவுனியா #நொச்சுமோட்டை பகுதியில் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி வேகமாக சென்ற அதி சொகுசு தனியார் பஸ் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் மோதுண்டு புரண்டுள்ளது.
இதன்போது பஸ் சாரதி மற்றும் பெண் ஒருவர் உட்பட மூவர் ஸ்தலத்தில் பலியாகியுள்ளனர்.
மேலும் 16 பேர் காயமடைந்த நிலையில் நால்வர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
.
இவ் விபத்து ஏற்பட்ட சமயம் அதே திசையில் பயணித்த மற்றுமொரு சொகுசு பேரூந்து சாரதி தனது பேரூந்தை விபத்து ஏற்படுவதை தவிர்க்கும் முகமாக வீதியின் ஒரமாக செலுத்தி மற்றுமொரு பேரூந்து விபத்தை தவிர்த்திருந்தார்.
இவ் விபத்து தொடர்பான விசாரணைகளை வவுனியா மற்றும் ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



No comments:
Post a Comment