வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சீரான வானிலை காணப்படும்.
வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் மணித்தியாலத்திற்கு 40 ‐ 50 km வரையிலான வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக்கூடும்.
மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் காலை வேளையில் பனி மூட்டம் காணப்படும்.
கடல் பிராந்தியங்களில்
****************************
வங்காள விரிகுடாவின் தென்கிழக்குப் பகுதியில் நிலைகொண்டுள்ள தாழ் அமுக்கப் பிரதேசம் அடுத்துவரும் 48 மணித்தியாலங்களில் தீவிரமடைந்து தாழ் அமுக்கமாக மாற்றமடையும். இது இலங்கையின் வட கரையை அண்மித்ததாக மேற்கு ‐ வடமேற்குத் திசையினூடாக நகர்ந்து நாளையளவில் தமிழ் நாட்டுக் கரையை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனபடியினால் காங்கேசன்துறை தொடக்கம் திருகோணமலை ஊடாக மட்டக்களப்பு வரையான ஆழமான மற்றும் ஆழமற்ற கடல் பிராந்தியங்களுக்கும் வங்காள விரிகுடாவின் கடல் பிராந்தியத்திற்கும் 21 ம் திகதிவரையில் மீனவர்களும் கடல்சார் ஊழியர்களும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப் படுகின்றனர்.
இக் கடல் பிராந்தியங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
காங்கேசன்துறை தொடக்கம் திருகோணமலை, மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 45 ‐ 50 km இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக்கூடும் இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பாக் காணப்படும்.
கலாநிதி மொஹமட் சாலிஹீன்,
சிரேஸ்ட வானிலை அதிகாரி.



No comments:
Post a Comment