(அஷ்ரப் ஏ சமத்)
முஸ்லிம் மீடியா போரத்தின் மாவட்ட இணைப்பாளா்களது கூட்டம் மருதானை அல்சபா மண்டபத்தில் ஞயிற்றுக்கிழமை (13) நடைபெற்றது.ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் செயற்குழு உறுப்பிணா்கள் மற்றும் மாவட்ட இணைப்பாளா்களும் கலந்து கொண்டனா் விடிவெள்ளிப் பத்திரிகையின் பிரதம ஆசிரியரும் ஸ்ரீலங்கா மீடியா போரத்தின் சிரேஸ்ட செயற்குழு உறுப்பினருமான எம் பி.எம். பைருஸ் நிகழ்வில் கலநது கொண்டு தகவல் அறியும் சட்டம் தொடா்பில் விரிவுரையாற்றினாா்.சகல மாவட்ட இணைப்பாளா்கள் தத்தமது பிரதேசத்தில் தகவல் அறியும் சட்டத்தினைப் பயன்படுத்தி தமது பிரதேசத்தில் நடைபெற்ற சம்பவங்கள், அநீதிகள் பற்றி செய்தி அறிக்கை ஒன்றைத் தயாா்படுத்துமாறும் கூறப்பட்டது. அத்துடன் மாவட்ட இணைப்பாளா்கள் தத்தமது மாவட்டங்களில் உ்ளள முஸ்லிம் மீடியா போரத்தின் உறுப்பிணா்களை இணைத்து பாடாலை மட்டத்தில் ஊடகக் கருத்தரங்குகள் நாடாத்துவதற்கும் ஒத்துழைப்பு வழங்குவதற்கும் கலந்துரையாடப்பட்டது.
இந் நிகழ்வில் மீடியா போரத்தின் தலைவி புர்ஹான் பீபி இப்திக்காா், போரத்தின் ஆலோசகா் என்.எம் அமீன், போரத்தின் செயலாளா் சிஹார் அனீஸ், மற்றும் சிரேஷ்ட உறுபபிணா்களான எம்.ஏ.எம்.நிலாம், சட்டத்தரணி ரசீத் எம். இம்தியாஸ், தாஹா எம். முசம்மில், பொருலாளா் ஜெம்ஸித் மற்றும் செய்குழு உறுப்பிணா்களும் கலந்து கொண்டனா்.









No comments:
Post a Comment