உலகில் மது அருந்துவது தொடர்பான தரவரிசையில் இலங்கை 79வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாக கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பொருளாதார அழுத்தம் காரணமாக நாட்டில் மது பாவனை வேகமாக குறைந்துள்ளதாக கலால் ஆணையாளர் கபில குமாரசிங்க தெரிவித்தார்.
இலங்கையில் அண்மைக்காலமாக மது பாவனை மிகவும் குறைந்துள்ளது. மதுபானத்தின் விலை அதிகரிப்பு மற்றும் வருமானம் குறைவடைந்தமையே இதில் பிரதானமாக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்றார்.
நாட்டின் பொருளாதார அழுத்தங்களுக்கு மத்தியில் மதுபான பயன்பாடு துரித கதியில் வீழ்ச்சியடைந்துள்ளதாக மதுவரித் திணைக்களத்தின் மது வரி ஆணையாளர் கபில குமாரசிங்க தெரிவித்துள்ளார்.
மதுபான உற்பத்தியின் விற்பனையானது 40 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அண்மைய நாட்களில் மதுபான விற்பனை பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
மக்களின் வருமான வீழ்ச்சி மற்றும் மதுபான வகைகளின் விலை அதிகரிப்பு காரணமாக இந்த நிலைமை உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.




No comments:
Post a Comment