Recent Posts

Search This Blog

5 ஸ்டார் ஹோட்டலில் பில் செலுத்தாமல் எஸ்கேப்பாகிய பிக்கு CID யினரால் கைது

Thursday, 3 November 2022


கொழும்பில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் 18 நாட்களாக தங்கியிருந்த பிக்கு ஒருவரை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (சிஐடி) கைது செய்யப்பட்டுள்ளார்.


மஹியங்கனை பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றின் பிக்கு கடந்த ஆகஸ்ட் 31ஆம் திகதி கொழும்பில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலுக்குச் சென்று குறைந்தது 18 நாட்கள் தங்கியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. 


எவ்வாறாயினும், பிக்கு திடீரென சுகவீனம் ஏற்பட்டதையடுத்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும்,அவரது  ஹோட்டல் கட்டணம் அவர் உடல் நிலை தேறியபின்னர் செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்ட போதும்,


பிக்கு வைத்தியசாலையில் இருந்து வெளியேறி மஹியங்கனையிலுள்ள தனது ஆலயத்திற்குச் சென்ற போது ஹோட்டல் கட்டணத்தை செலுத்தத் தவறியதையடுத்து ஹோட்டல் நிர்வாகம் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் முறைப்பாடு செய்துள்ளது. 


அதன்படி, சிஐடியினர் பிக்குவை அவரது கோவிலில் இருந்து கைது செய்தனர். கோட்டை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட பிக்கு நவம்பர் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.



No comments:

Post a Comment