Recent Posts

Search This Blog

பயணித்துக் கொண்டிருந்த வேன் திடீரென தீப்பற்றி முற்றாக எரிந்தது.

Saturday, 22 October 2022


மாவிட்டபுரத்தில் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்துக்கு அருகாமையில் வேன் வாகனம் ஒன்று தீயில் எரிந்து முற்றாகச் சேதமடைந்துள்ளது.

பயணித்துக் கொண்டிருந்த வேன் திடீரென தீப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்றிரவு 9 மணியளவில் சாரதி மட்டும் பயணித்த போது இந்த தீ விபத்து இடம்பெற்றுள்ளது.

மின் ஒழுக்கு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கின்ற போதும் சரியான காரணம் கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தையடுத்து காங்கேசன்துறை கடற்படை முகாமிலிருந்து தீயணைப்பு வாகனம் கொண்டு வரப்பட்டு தீயை அணைத்த போதும் வேன் முற்றாகச் சேதமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.




No comments:

Post a Comment