Recent Posts

Search This Blog

செல்பி எடுக்க முற்பட்ட இளைஞன் நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்து மரணம்.

Sunday, 4 September 2022


ஹல்துமுல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடவேரிய தோட்ட பகுதியில் நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உடவேரிய தோட்டத்திலுள்ள நீர்வீழ்ச்சிக்கு வெள்ளிக்கிழமை (2) 2 இளைஞர்கள் சென்றுள்ளதாகவும், அவர்களில் ஒருவர் செல்பி புகைப்படம் எடுக்க முற்பட்ட போது நீர்வீழ்ச்சியில் இருந்து தவறி விழுந்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்த 24 வயதுடைய இளைஞனின் சடலம் சனிக்கிழமை (3) நீர்க்குழாய் ஒன்றிலிருந்து (அவர் தவறி விழுந்ததாக கூறப்படும் இடத்திலிருந்து 200 மீற்றர் கீழே உள்ள நீர்க் குழாய் ) எடுக்கப் பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.


ஹல்துமுல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்


No comments:

Post a Comment