Recent Posts

Search This Blog

இன்று நாட்டின் சில பிரதேசங்களில் மழையுடனான வானிலை...

Monday, 19 September 2022


சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.

ஊவா மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில இடங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.

கடல் பிராந்தியங்களில்
****************************

கொழும்பு தொடக்கம் காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடல் பிராந்தியங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.

கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 20 ‐ 30 km வேகத்தில் தென்மேற்குத் திசையில் இருந்து காற்று வீசும்.

புத்தளம் தொடக்கம் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான அத்துடன் மாத்தறை தொடக்கம் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 40 ‐ 50 km இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக்கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.

கலாநிதி மொஹமட் சாலிஹீன்,
சிரேஸ்ட வானிலை அதிகாரி.


No comments:

Post a Comment