Recent Posts

Search This Blog

கோழியின் புதிய நிலையான விலை 1300 மற்றும் 1350 ; கோழி இறைச்சி உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவிப்பு

Monday, 19 September 2022


தோலுடன்
கூடிய கோழியின் புதிய நிலையான விலையை அகில இலங்கை கோழி இறைச்சி உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.


தோலுடன் கூடிய 1 கிலோகிராம் கோழி இறைச்சி இன்று (19) முதல் ரூபா 1300 முதல் 1350 ரூபா வரையில் விற்பனை செய்யப்படும் என சங்கம் தெரிவித்துள்ளது.


உள்ளூர் சந்தைக்கு கோழி இறைச்சியை தொடர்ச்சியாக வழங்குவது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அகில இலங்கை கோழி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் இன்று கூடவுள்ளதாக அதன் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.


கால்நடை தீவனம் கிடைத்தால் கோழி உற்பத்தி செலவை குறைக்க முடியும் என அஜித் குணசேகர மேலும் சுட்டிக்காட்டினார்


No comments:

Post a Comment