Recent Posts

Search This Blog

பாணின் விலை 300 ரூபாவானது

Saturday, 3 September 2022


450 கிராம் நிறையுடைய ஒரு இறாத்தல் பாணின் விலையை 300 ரூபாவாக விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கோதுமை மாவின் விலை அதிகரிப்பை அடுத்தே, இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் கடுமையான கோதுமை மா தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.

பேக்கரி உற்பத்திப் பொருட்களுக்கு கோதுமை மா பயன்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில் கோதுமை மாவுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுவதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன கூறியிருந்தார்



No comments:

Post a Comment