Recent Posts

Search This Blog

போராட்டத்தில் ஈடுபட்ட 200 பேர் வெளிநாடு செல்வதற்காக தூதரகங்களில் தஞ்சம் கோரியுள்ளதாக தகவல்..

Saturday, 3 September 2022


அறகலய’ போராட்டத்தின் போது பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட முன்னணி வர்த்தகர்கள் உட்பட சுமார் எண்பது பேர் பல்வேறு வழிகளில் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்ற இவர்களை தேடும் பணியில் பாதுகாப்பு தரப்பினர் தற்போது ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


இவர்களை கைது செய்வதற்கு இன்டர்போல் உள்ளிட்ட சர்வதேச பாதுகாப்பு அமைப்புகளின் உதவியும் கோரப்பட்டுள்ளது.


பல்வேறு அச்சுறுத்தல்கள் இருப்பதாகக் கூறி தூதரகங்களில் தவறான தகவல்களை சமர்ப்பித்து சிலர் வெளிநாடு சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.


ஜனாதிபதி மாளிகைக்குள் புகுந்து செல்பி எடுத்து இணையத்தில் வெளியிட்ட கோடீஸ்வர தொழிலதிபர் ஒருவர் தொடர்பில் பொலிஸார் விசாரணை நடத்தியதை அடுத்து அவர் ஆப்பிரிக்காவுக்கு தப்பிச் சென்றுள்ளதாக பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.


இதேவேளை, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மேலும் 200 பேர் வெளிநாடு செல்வதற்காக தூதரகங்களில் தஞ்சம் கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.



No comments:

Post a Comment