Recent Posts

Search This Blog

சுயாதீன கட்சிகளின் கூட்டமைப்பின் தலைவராக விமல் வீரவங்ச நியமனம்.

Thursday, 18 August 2022


சுயாதீன கட்சிகளின் கூட்டமைப்பின் தலைவராக, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச நியமிக்கப்பட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார இதனைத் தெரிவித்துள்ளார்.

புதிய தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தலைமையிலான புதிய கூட்டணி எதிர்வரும் 4 ஆம் திகதி அறிவிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் கூட்டணியில் 8 சுயாதீன கட்சிகள் ஒன்றிணையும் என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.



No comments:

Post a Comment