Recent Posts

Search This Blog

சல்மானுல் பாரிஸ், (ஊரின் முதல்) சட்டத்தரணியாக உயர் நீதிமன்றில் சத்தியப்பிரமாணம்.

Saturday, 6 August 2022


(எஸ். அஷ்ரப்கான்)
கெக்கிராவ, பண்டாரபொத்தானையைச் சேர்ந்த நூர் மொஹம்மது சல்மானுல் பாரிஸ் பிரதம நீதியரசர் உள்ளிட்ட உயர் நீதிமன்ற நீதியரசர் குழாம் முன்னிலையில் அண்மையில் சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.


கடான்டுகம முஸ்லிம் மகா வித்தியாலயம், பொலநறுவை முஸ்லிம் மத்திய கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவரான இவர், உருகுணை பல்கலைக்கழகத்தில் பொறியியல்துறையில் தனது பட்டப்படிப்பினை நிறைவு செய்து கௌரவப் பட்டம் பெற்றுள்ளதுடன், கொழும்பு சட்டக்கல்லூரியிலும் சட்டக்கல்வியை கற்று சட்டத்தரணியாக தெரிவானார்.


பண்டாரபொத்தானையைச் சேர்ந்த ஏ.சி.எல்.நூர் மொஹம்மது, ஏ.எம்.சிபானுன் நிஸா தம்பதியினரின் புதல்வரான இவர், பண்டாரபொத்தானை பிரதேசத்தின் முதலாவது பொறியியலாளர் மற்றும் முதலாவது சட்டத்தரணி என்பதும் குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment