Recent Posts

Search This Blog

நீதிமன்றத்துக்குள் துப்பாக்கி சூடு.. பொலிஸ் நிலையத்தில் கொலை - நாட்டின் சட்டம் எங்கே சென்று விட்டது? பொதுஜன பெரமுன கேள்வி

Monday, 8 August 2022


ஸ்ரீ லங்கா பொதுஜன
பெரமுனவின் தலைவர்
மஹிந்த ராஜபக்ஷவும்,
கட்சியின் ஸ்தாபகர் பசில்
ராஜபக்ஷவும் கட்சிக்கு
இளைஞர் ஒருவரை
தலைவராக நியமித்து,
கட்சியை புதிய பாதைக்கு
அழைத்துச் செல்ல
தயாராகி வருகின்றனர் என
அக்கட்சியின் பின்வரிசை
பாராளுமன்ற உறுப்பினரான
எம்.டபிஸ்யூ.டீ சஹன் பிரதீப்
தெரிவித்தார்.


ஸ்ரீ லங்கா பொதுஜன
பெரமுனவின்
தலைமையகத்தில் நேற்று (08)
நடைபெற்ற ஊடகவியலாளர்
சந்திப்பில் அவர் இதனை
தெரிவித்தார்.


எல்லா
கட்சிகளும் மோசமான
காலத்தை கடந்தே
வந்துள்ளன. அதுபோல
பொதுஜன பெரமுனவுக்கு
நிலையொன்று
ஏற்பட்டுள்ளது.



எவ்வாறாயினும் தொடர்ந்து
நேர்மையாகவும், மக்களின்
குரல்களுக்கு செவி சாய்த்தும்,
மக்கள் எதிர்பார்க்கும்
நிவாரணங்களையும் வழங்கி
மக்களின் நம்பிக்கையை மீளப் பெற்றுக்கொள்ள
நடவடிக்கை எடுக்கப்படும்
என்றார்.



நீதிமன்றத்துக்குள்
நீதிபதிக்கு முன்பாகவே
துப்பாக்கிச் சூடு
நடக்கிறது.


பொலிஸ்
நிலையத்தில் முறைப்பாடு
விசாரிக்கப்பட்டுக்
கொண்டிருக்கும்போது
ஒருவர் கொலை
செய்யப்பட்டிருக்கிறார்.


எனவே பொலிஸ்
நிலையத்துக்குள் கொலை
சம்பவமும், நீதிமன்றத்துக்குள்
துப்பாக்கிப்பிரயோகமும்
மேற்கொள்ளப்படும்
என்றால் நாட்டின் சட்டம்
எங்கு சென்றுள்ளது
என்பது தொடர்பில்
பாராளுமன்றத்தில்
விவாதிக்கப்பட வேண்டும்
என்றார்.



நாட்டில் இடம்பெறும்
போராட்டங்களாலேயே
இதுபோன்ற சம்பவங்கள்
நிகழ்வதாகவும், நாட்டில்
சட்டத்தின் ஆட்சி எப்போது
வீழ்ச்சியடையும் என எதி
ர் பார்த்துக்கொண்டிரு
ப்பவர்கள் இதுபோன்ற
சந்தர்ப்பங்களைப்
பயன்படுத்திக்
கொள்கின்றனர் என்றார்.


No comments:

Post a Comment